புடவையில் ஜொலித்த கனடா பெண்! இந்திய இளைஞருடன் நடைபெற்ற திருமண புகைப்படங்கள்
கனடாவை சேர்ந்த இளம்பெண்ணிற்கும், இந்திய இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் சிம்மலகி. இவர் கனடாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அவருக்கும் அங்கு பணியாற்றி வரும் அதே நாட்டை சேர்ந்த சாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்ய பெற்றோரின் சம்மதம் பெற்றனர்.

இதையடுத்து ரவிக்குமார் - சாராவின் திருமணம் விஜயாப்புராவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்திய பாரம்பரிய முறைப்படி இருவரின் திருமணம் அரங்கேறியது. திருமணத்தில் மணப்பெண் சாரா புடவையில் ஜொலித்தார். புதுமணத்தம்பதியை இருவரின் பெற்றோர்களும், குடும்பத்தினரும், உறவினர்களும் வாழ்த்தினார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        