கிரிக்கெட் திறமையால் 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய இந்தியர்
பிரித்தானியாவில் இந்தியர் ஒருவர் தனது வேகமான எதிர்வினையாற்றும் திறன் மற்றும் கிரிக்கெட் திறமையால் 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அறிக்கையின்படி, அந்த சிறுவன் தனது வீட்டின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சென்றுகொண்டிருந்த இந்திரான முகமது ஜெஸில் (Mohamed Jesil), குழந்தை கீழே விழப்போகிறதை கவனித்து, உடனடியாக ஓடி சென்று தன்னுடைய கைகளால் பிடித்து உயிரை காப்பாற்றினார்.

ஜெஸில், “எனது கிரிக்கெட் பயிற்சிகள் மற்றும் பந்தைப் பிடிக்கும் திறமைகள் தான் இங்கு உதவியாக இருந்தது. அது இல்லையெனில் குழந்தையை நான் காப்பற்றியிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் அவரை “உண்மையான ஹீரோ” என புகழ்ந்து வருகின்றனர்.
குழந்தையின் பெற்றோர்கள், “எங்கள் மகனின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் இல்லையெனில் எங்கள் குழந்தை உயிருடன் இருந்திருக்க முடியாது” என உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஜெஸில், தனது செயலை சாதாரண மனிதநேய நடவடிக்கையாகவே கருதுகிறார். “நான் செய்ததை யாராக இருந்தாலும் செய்திருப்பார்கள். ஆனால், கிரிக்கெட் எனக்கு வேகமான எதிர்வினை திறனை கொடுத்தது” என அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், விளையாட்டு திறன்கள் வாழ்க்கையில் எவ்வாறு எதிர்பாராத சூழ்நிலைகளில் உதவுகின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |