அடம்பிடித்து கனடாவுக்கு வந்த இந்தியர்: ஒரே வாரத்தில் செய்த கொடூரச் செயல்
கனடாவுக்கு வந்தேயாகவேண்டும் என அடம்பிடித்து கனடாவுக்கு வந்த இந்தியர் ஒருவர், வந்த ஒரே வாரத்தில் தன் மனைவியை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார்.
அடம்பிடித்து கனடாவுக்கு வந்த இந்தியர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங், பல்வீந்தர் கௌர் (41) தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள்.

மூத்த மகள், ஹர்நூர்பிரீத் கௌர் (22) மகன், குர்னூர் சிங் (18). ஹர்நூர்பிரீத், நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹர்நூர்பிரீத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை கவனித்துக்கொள்வதற்காக கனடா சென்றுள்ளார் அவரது தாயான பல்வீந்தர் கௌர்.
இந்நிலையில், தானும் கனடாவுக்கு வந்தேயாகவேண்டும் என கௌரின் கணவரான சிங் அடம்பிடித்துவர, அவருக்கு விசா ஏற்பாடு செய்துள்ளார் கௌர்.
ஆனால், கனடா வந்த ஒரே வாரத்தில் தன் மனைவியை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டார் சிங்.
இது நடந்தது, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 9ஆம் திகதி. அப்போது சிங்குக்கு வயது 51.
ஏதோ சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிங் வீட்டுக்கு வர, அங்கே இரத்த வெள்ளத்தில் அசைவின்றிக் கிடந்துள்ளார் கௌர்.
பொலிசார் சிங்கைக் கைது செய்ய, திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தால் உணர்ச்சி வசப்பட்டு தன் மனைவியை வயிற்றில் குத்திவிட்டதாக கூறியிருந்தார் சிங்.
வாதத்தை ஏற்க நீதிபதி மறுப்பு
ஆனால், கௌர் மார்பிலும் கழுத்திலும் ஏழு கத்திக் குத்துக் காயங்கள் இருக்க, அதிக அளவில் இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு கூறியது.

ஆக, வாக்குவாதம் முற்றி தற்செயலாக உனர்ச்சி வசப்பட்டு மனைவியைக் குத்திவிட்டதாக சிங் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதியான ஆண்ட்ரியா (Andrea Ormiston), சிங் முன்வைத்த ஆதாரங்கள் நம்பத்தகாதவை, ஏற்றுக்கொள்ள இயலாதவை எனகூறி அவற்றை நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில், சிங் தன் மனைவியைக் கொலை செய்த வழக்கில் அவர் குற்றவாளி என தற்போது நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அவர், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். தீர்ப்பு வழங்கும் திகதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |