30 ஆண்டுகளாக என்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழும் நபர்.., வைரலாகும் வீடியோ
இந்தியர் ஒருவர் 30 ஆண்டுகளாக என்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள மனிதர் ஒருவரின் உணவுப் பழக்கம் பலரையும் திகைக்க வைத்துள்ளது. சாதம் அல்லது சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக, அவர் என்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழ்கிறார்.
கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த "ஆயில் குமார்" என்று பிரபலமாக அறியப்படும் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஏழு முதல் எட்டு லிட்டர் எஞ்சின் எண்ணெயைக் குடிப்பதாகக் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு துறவியைப் போல உடையணிந்த “ஆயில் குமார்” ஒரு பாட்டிலில் உள்ள என்ஜின் எண்ணெயைக் குடிப்பது காணப்படுகிறது.
இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமான உணவு முறையைத் தவிர்த்து, தேநீர் மற்றும் என்ஜின் எண்ணெயை குடித்து உயிர் பிழைத்துள்ளார்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் அவர் தொடர்ந்து ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பனின் ஆசீர்வாதத்தால் மட்டுமே இந்த வாழ்க்கை முறை சாத்தியமாகும் என்று நம்புகிறார் குமார்.
ஆனால் என்ஜின் ஆயிலை தொடர்ந்து குடித்து வந்தாலோ சுவாசித்தாலோ சுவாச மண்டல பாதிப்பும் வயிற்று போக்கும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |