கனடாவில் கௌரவிக்கப்பட்ட 5 வயது இந்திய வம்சாவளி கணித மேதை
Indian Math Prodigy Honoured In Canada: கனடாவில் 5 வயது இந்திய வம்சாவளி கணித மேதை கௌரவிக்கப்பட்டார்.
அர்ஜுன் விஷால் ப்ரஜாபதி
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2026 அக்டோபர் 29 அன்று, 5 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் விஷால் ப்ரஜாபதி தனது அபாரமான அறிவாற்றலுக்காக சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்.
அர்ஜுன், ஸ்டான்ஃபோர்ட்-பினேட் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல்ஸ் (SB5) மூலம் நடத்தப்பட்ட சோதனையில் IQ 141 மதிப்பெண் பெற்று, உலகளவில் 99.7 சதவீதம் உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

அவர் நான்கு வயதிலேயே Mensa மற்றும் Intertel என்ற உலகின் உயர்ந்த IQ அமைப்புகளில் உறுப்பினராக இணைந்தார். இதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்டு ஆகியோர் வாழ்த்து கடிதங்களை அனுப்பினர்.
சட்டமன்றத்தில், Mary-Margaret McMahon என்ற உறுப்பினர் அவருக்கு Certificate of Recognition வழங்கினார்.
அர்ஜுன் தனது பெற்றோர் டாக்டர் விஷால் ப்ரஜாபதி (வடோதரா, குஜராத்) மற்றும் மஹிதா தோட்டா (ஹைதராபாத், தெலுங்கானா) உடன் கலந்து கொண்டார்.
அர்ஜுன் 18 மாத வயதிலேயே புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். இன்று வரை அவர் 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்துள்ளார். கணிதத்தில் 1 முதல் 20 வரை பெருக்கல் வாய்ப்பாடு, சதுரம், கன சதுரம், தர்க்க சிந்தனை போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்.
அவர் Northwestern University-இல் மனித உடலியல் பாடங்களை கற்றுள்ளார். மேலும் Harvard மற்றும் MIT பல்கலைக்கழகங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அர்ஜுனின் பெற்றோர், “எங்கள் குழந்தையின் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது” என்ற ‘Foster, Not Force’ என்ற தத்துவத்தை பின்பற்றுகின்றனர். இந்த சிறுவனின் சாதனைகள், இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெருமை சேர்க்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |