கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்திய புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பின்னணி
கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்திய புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள்
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.
பட்டேல் குடும்பத்துடனேயே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மேலும் 7 பேர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர்தான் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
image -Simon Dingley/CBC
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பின்னணி
தற்போது நாடுகடத்தப்பட்டுள்ள இந்த நபரை, அமெரிக்காவுக்கு அனுப்புவதாக, இந்திய ஏஜண்ட் ஒருவர் பெருந்தொகை ஒன்றைப் பெற்றுள்ளார்.
அவரை அமெரிக்கா அனுப்புவதன் முதல் படியாக, அந்த நபர் போலி ஆவணங்கள் மூலம் கனடாவின் தெற்கு ஒன்ராறியோவிலுள்ள Loyalist College என்னும் கல்லூரியில் இணைய விண்ணப்பம் அளித்துள்ளார்.
image - Warren Kay/CBC
ஆனால், அவர் கல்லூரியில் இணையவேயில்லை. அதாவது கல்வி பயில்வதற்காக கனடா வருவதுபோல வந்து, அப்படியே அமெரிக்காவுக்குள் நுழைவதுதான் திட்டம். அதாவது, இது அவருடைய ஏஜண்ட் அளித்த திட்டம்.
திட்டப்படி கனடா வந்த அந்த நபர், உயிரிழந்த பட்டேல் குடும்பம் மற்றும் சிலருடன் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
பட்டேல் குடும்பம் வழியில் பனியில் உறைந்து உயிரிழக்க, மற்றவர்கள் அதிகாரிகளிடம் சிக்க, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
image -Vaishali Patel/Facebook
அவர்களில் ஒருவர்தான் இந்த ஆவண மோசடி மூலம் கனடாவுக்குள் நுழைந்தவர்.
தற்போது அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவர் எங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கனடாவில் சர்வதேச மாணவர்களையே நம்பியிருக்கும் சில கல்லூரிகள் ஆள் சேர்ப்புக்கு முயற்சி செய்வதைப் பயன்படுத்தி, சிலர் அதன் மூலமாக புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பும் ஒரு மோசடி நடைபெற்றுவருவது தற்போது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.