பிரித்தானியாவுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள்! உள்துறை வெளியிட்ட அறிக்கை
கடந்த ஆண்டு மட்டும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த குழுக்களில் இந்தியர்களின் குழு மூன்றாவது இடத்தில் உள்ளது.
புலம்பெயரும் இந்தியர்கள்
2022ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் 233 இந்தியர்கள் புலம்பெயர்ந்தனர். ஆனால் ஜனவரியில் சுமார் 250 இந்தியர்கள் புலம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த ஆண்டு புலம்பெயர்ந்த 1,180 பேரில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை இந்தியர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிரியர்களைத் தொடர்ந்து ஆப்கானியர்கள் மிகப்பெறிய குழுவாக இருந்தனர்.
இதுதொடர்பாக உள்துறை அலுவலக அதிகாரி கூறும்போது, இந்திய மாணவர்கள் குறைந்த விலையில் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும் அம்சத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வதாகதான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
@Stuart Brock/LNP
புகலிட விண்ணப்பம்
அதாவது, அவர்கள் ஒரு பட்டப்படிப்பை படிக்கவும், உள்நாட்டுக் கட்டணங்களைச் செலுத்தவும் முடியும். இது தற்போது 9, 250 பவுண்ட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அவர்களின் புகலிடத்திற்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. மேலும், இந்திய குடிமக்கள் தங்கள் விசாக் காலத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரில் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Stuart Brock/LNP