தண்ணீர் என்றாலே மரண பயம்: கனடா எல்லையில் மரணமடைந்த இந்திய புலம்பெயர் குடும்பத்தின் பின்னணி
கனடா எல்லையில் கடந்த வாரம் லாரன்ஸ் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய புலம்பெயர் குடும்பம் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தண்ணீர் என்றாலே பயம்
கடந்த வாரம் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் பொருட்டு படகில் புறப்பட்டு சென்றவர்களில் இந்தியாவின் குஜராத் மாகாணத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் அவரது உறவினர்கள் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
@Mehsana Police
கியூபெக் மாகாணத்தில் லாரன்ஸ் நதியில் இருந்து கடந்த வாரம் இவர்களின் சடலம் மீட்கப்பட்டது. உண்மையில், இவர்களுக்கு தண்ணீர் என்றாலே மரண பயம் என உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி 49 வயதான பிரவீன் சௌத்ரி என்பவர், அவரது இதுவரையான வாழ்நாளில் ஒருமுறை கூட படகில் பயணம் செய்ததில்லை எனவும், அமெரிக்காவுக்குள் நுழையும் பொருட்டு அவர் எப்படி படகு பயணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பது தமது விளங்கவில்லை எனவும் அந்த உறவினர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் தம்மால் கனடா வந்து இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க முடியாது எனவும், அங்குள்ள குஜராத் சமூக மக்கள் ஒன்றிணைந்து இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர் மக்கள் சடலமாக
இதனிடையே, 8 புலம்பெயர் மக்கள் சடலமாக மீட்கப்பட்ட படகின் உரிமையாளரை தேடும் பணியை முடித்துக் கொண்டுள்ளதாக வியாழக்கிழமை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 29 அன்று இரவு இரண்டு புலம்பெயர்ந்த குடும்பங்களின் உடல்களுக்கு அடுத்ததாக கண்டெடுக்கப்பட்ட படகை இயக்கியவர் 30 வயதான கேசி ஓக்ஸ் என்பவர் என பொலிசார் நம்புகின்றனர்.
இந்த குடும்பங்கள் மொஹாக் பிரதேசத்தின் ஊடாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.