உலகின் முதல் மனிதன்! எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்: யார் இந்த ரோஹ்தாஷ் கிலேரி?
எல்ப்ரஸ் மலை சிகரத்தின் மீது ஏறி இந்திய மலையேற்ற வீரர் ரோஹ்தாஷ் கிலேரி சாதனை படைத்துள்ளார்.
இந்திய மலையேற்ற வீரரின் வரலாற்று சாதனை
ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் ரோஹ்தாஷ் கிலேரி ஐரோப்பாவின் உயர்ந்த சிகரமான எல்ப்ரஸில் ஆக்சிஜன் இல்லாமல் 24 மணி நேரம் தங்கிய முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக ஜனவரி 21ம் திகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹ்தாஷ் கிலேரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த உலக சாதனையானது ஒரு முயற்சியில் நடந்தது அல்ல, கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக எல்ப்ரஸ் மலையின் உச்சியை அடைந்தார் ரோஹ்தாஷ், பின்னர் 2020ம் ஆண்டு எல்ப்ரஸ் மலையில் 24 மணி நேரம் தங்கியிருக்க முயற்சி செய்து தோல்வியடைந்தார்.
பின்னர் 2023ல் முயற்சி செய்த போது மோசமான வானிலை காரணமாக தன்னுடைய முயற்சியை கைவிட்டார்.
இந்நிலையில் 2026ம் ஆண்டு தன்னுடைய 4வது முயற்சியில் ரோஹ்தாஷ் கிலேரி இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
எல்ப்ரஸ் மலை சிகரம்
ரஷ்யாவில் அமைந்துள்ள எல்ப்ரஸ் மலை சிகரம் கிட்டத்தட்ட 5,642 மீட்டர்(18,510 அடி) உயரம் கொண்டது. மற்றும் இங்கு வெப்ப நிலையானது -50 டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும்.

யார் இந்த ரோஹ்தாஷ் கிலேரி?
ஹரியானா மாநிலம் மல்லாப்பூரின் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ரோஹ்தாஷ் கிலேரி.
சுபாஷ் சந்தர் பிஷ்னோய் மற்றும் பன்சி பிஷ்னோய் தம்பதிக்கு 1996ம் ஆண்டு மே மாதம் பிறந்த மகன் ரோஹ்தாஷ் கிலேரி ஆவார். சமூக வலைதளங்களில் ரோஹ்தாஷ் கிலேரியின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |