ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புலம்பெயர்ந்து... இந்தியர் ஒருவர் உருவாக்கிய நிறுவனம்: அவரது சொத்து மதிப்பு
சிறந்த தொழில் வாய்ப்புகளுக்காக பல இந்தியர்கள் உலகின் பிற பகுதிகளுக்கு புலம்பெயர்வதுடன், குறிப்பிட்ட சிலர் கடும் உழைப்பால் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர்.
மருத்துவமனை குழுமம்
அத்தகைய நபர்களில் ஒருவர் டாக்டர் ஷம்ஷீர் வயலில். வெற்றிகரமான மருத்துவமனை குழுமத்தை நடத்தி வருகிறார். பர்ஜீல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் குறிப்பிடத்தக்க மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் அனைத்தும் இவரது நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
47 வயதான இவர் கேரள மாநிலத்தில் ஒரு வணிக குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்து உள்ளூர் மருத்துவமனையில் கதிரியக்க நிபுணராகப் பணியாற்றினார்.
நடிகர் ஷாருக்கான்
சுமார் ஓராண்டுக்கு மேல் பணியாற்றிய பின்னர், தமது துறை சார்ந்த தொழில் வாய்ப்புகளை உணர்ந்து, 2007ல் LLH மருத்துவமனையை திறந்தார். அதற்கு உறுதுணையாக அவரது மாமனார் MA Yusuff Ali உதவியுள்ளார்.
தற்போது இவரது நிறுவனத்தின் கீழ் 16 மருத்துவமனைகள், 24 சுகாதார மையம் மற்றும் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், டாக்டர் ஷம்ஷீர் வயலில் என்பவரின் மொத்த சொத்துமதிப்பு ரூ 300,20 கோடி.
இவரது நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நடிகர் ஷாருக்கான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |