இந்தியக் கலைஞர் ஒருவருக்கு பிரான்சிலிருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பு
இந்தியக் கலைஞர் ஒருவருக்கு, பிரான்சில் சுவர் ஓவியங்கள் வரைவதற்காக சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கலைஞர் ஒருவருக்கு பிரான்சிலிருந்து வந்துள்ள அழைப்பு
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் சுரேஷ் கே நாயர். பனாரஸ் இந்துப் பல்கலையில் வர்ணக்கலை பயிற்றுவித்துவருகிறார் பேராசிரியர் சுரேஷ்.

இந்நிலையில், Mural என்னும் சுவர் ஓவியங்கள் வரைவதற்காக பேராசிரியர் சுரேஷுக்கு பிரான்சிலிருந்து சிறப்பு அழைப்பு வந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்திருக்கும், இந்திய தூதரகத்தால் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

15 நாட்கள் பிரான்சில் தங்கும் பேராசிரியர் சுரேஷ், இந்தியா மற்றும் அதன் கலாச்சாரம் தொடர்பிலான சுவர் ஓவியங்களைப் படைக்க இருக்கிறார்.
பேராசிரியர் சுரேஷ் ஏற்கனவே அமெரிக்கா, போர்ச்சுக்கல், பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் சீனா முதலான 15 நாடுகளில் சுவர் ஓவியங்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |