தான் லண்டனுக்கு வருவதற்கு உதவி செய்த மனைவியையே படுகொலை செய்த இந்தியர் இவர்தான்
திருமணமாகி ஒன்றரையாண்டுகள் கூட முடிவடையாத நிலையில், தான் லண்டன் வருவதற்கு காரணமாக இருந்த தன் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியரின் புகைப்படம் முதலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணமாகி ஒன்றரையாண்டுகள் கூட முடிவடையாத தம்பதி
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (23) என்பவருக்கும் மேஹாக்குக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது.
File photo
திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு கணவர் மனைவி விசா ஏற்பாடு செய்து அவரை லண்டனுக்கு வரவழைத்துள்ளார்.
தாயிடம் மகள் கூறிய துயர செய்தி
தன்னை மேஹாக் லண்டனுக்கு வரவழைத்த நிலையிலும், அவரிடம் எப்போதும் சண்டை போடுவாராம் சாஹில். தன்னை அவர் மோசமாக நடத்துவதாகவும், மோசமான விளைவுகளை சந்திப்பாய் என தன்னை மிரட்டுவதாகவும் தன் தாயிடம் பலமுறை கூறியுள்ளாராம் மேஹாக்.
மேஹாக் தினமும் தன் தாயாகிய மதுபாலாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுவாராம். ஞாயிற்றுக்கிழமை அவர் அழைக்கவில்லையாம். மகள் பிஸியாக இருக்கலாம் என எண்ணிய மதுபாலா, மறுநாள் திங்கட்கிழமையும் மகள் அழைக்காததால், மகள் வாழும் Croydonஇலிருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் வாழும் தங்கள் உறவினர் ஒருவரை அழைத்து, மகளைப் போய் பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
கிடைத்த அதிரவைக்கும் செய்தி
அன்று மாலை அந்த உறவினரிடமிருந்து மதுபாலாவுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஆம், மேஹாக்கை கொலை செய்துவிட்டதாக, சாஹிலை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த உறவினர்.
தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு துடிதுடித்துப்போயிருக்கிறார் மதுபாலா. அவரது கணவரான தர்லோக் சந்தர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோய்விட்டார்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தன் மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு பஞ்சாப் முதல்வர் Bhagwant Mannஐக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மேஹாக்கின் தாயான மதுபாலா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |