நீருக்கடியில் இயங்கும் வாகனங்களை பெறும் இந்திய கடற்படை - ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம்
நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ளன.
ஒடிசாவைச் சேர்ந்த Coratia Technologies என்ற டீப்-டெக் ரோபாட்டிக் ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்திய கடற்படையுடன் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய கடற்படைக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட Underwater Remotely Operated Vehicles (UWROVs) வழங்கப்படவுள்ளன.
"இந்த ஒப்பந்தம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடற்படையின் செயல்பாடுகளில் பெருமளவில் சேர்க்கும் முதல் முயற்சி" என Coratia Technologies தெரிவித்துள்ளது.
குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை வழங்கும் இந்த வடிவமைப்பு, நீருக்கடியில் இயங்கும் ரோபாட்டிக் துறையில் இந்தியாவின் முதல் முக்கிய முன்னேற்றமாகும்.
இந்நிறுவனம் ஏற்கெனவே, SAIL, Indian Oil, TATA Steel மற்றும் இந்திய ரயில்வே போன்ற பல நிறுவனங்களுக்கு பல்வேறு ஆழ்கடல் சேவைகளை வழங்கி வருகிறது.
UWROVs, அணைகள் மற்றும் பாலங்கள் ஆய்வு செய்வது, கடலடி வரைபடங்களை உருவாக்குவது, கடலில்சார் சூழ்நிலைகளை கண்காணிப்பது மற்றும் கடலுக்கு கீழிலுள்ள எரிசக்தி, வளங்கள், குழாய்கள், கேபிள்கள் ஆகியவற்றை பரிசோதித்தல் போன்ற பல்வேறு பயன்பாடுகக்ளுக்கு ஏற்றவையாக உள்ளன.
Coratia உருவாக்கிய Jalasimha, Jaladuta மற்றும் Navya (ASV) போன்ற ரோபோ வாகனங்கள், AI மற்றும் Machine Learning தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேரடி தரவுகள் மற்றும் சோனார் வரைபடங்களை உருவாக்குகின்றன.
இவை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஏற்றவையாக இருக்கின்றன.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் உள்ளூர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Navy, Coratia Technologies, Underwater Remotely Operated Vehicles, UWROVs