இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள்
இந்திய கடற்படையில் மேலும் 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்படவுள்ளன.
இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 17 போர் கப்பல்கள் மற்றும் 9 நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது ஒப்புதல் நிலைகளில் உள்ளன.
ஏற்கனவே 61 கப்பல்கள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
சீனாவின் PLA கடற்படை உலகில் 355 கப்பல்களுடன் மிகப்பாரிய கடற்படையாக மாறிவிட்ட நிலையில், இந்திய கடற்படை 130-க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் தனது திறனை விரிவாக்க முயற்சியில் உள்ளது.
முக்கிய திட்டங்கள்:
- Project 17B: ரூ.70,000 கோடி மதிப்பில் 7 புதிய Next Generation Frigates
- Project 75(I): ரூ.70,000 கோடி மதிப்பில் 6 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள்
- Project 75 (Add-ons): ரூ.36,000 கோடி மதிப்பில் 3 Scorpene-class நீர்மூழ்கிக் கப்பல்கள்
- Next Gen Corvettes (NGC): ரூ.36,000 கோடி மதிப்பில் 8 புதிய போர்க்கப்பல்கள்
இந்த திட்டங்கள் அனைத்தும் உள்நாட்டு கட்டுமானத்திலேயே நடைபெறவுள்ளன.
ஒட்டுமொத்தமாக ரூ.2.4 லட்சம் கோடி செலவில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடைசிக் கட்ட வளர்ச்சி
பழைய கப்பல்களை மாற்றும் நோக்கிலும், புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட போர் மற்றும் பாதுகாப்பு கப்பல்களை சேர்க்கும் நோக்கிலும் இந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2035-க்குள் 175 கப்பல்களின் தொகுப்பை நோக்கி செல்வதே கடற்படையின் நோக்கமாக உள்ளது.
சவால்கள்:
தற்போதைய 12 பழைய வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் பல தடைகள் உள்ளன
Destroyer வகை கப்பல்களுக்கான புதிய திட்டங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |