கடற்கொள்ளையர்களிடம் இருந்து வணிக கப்பலை மீட்ட இந்திய கடற்படை: X தளத்தில் வெளியான வீடியோ
சோமாலியா நாட்டு கடற்கரையில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை வீரர்கள் மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட கப்பல்
வடக்கு அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை அருகே லைபீரிய கொடி ஏந்திய லீலா நோர்ஃபோக்(MV Lila Norfolk) என்ற கப்பல் ஜனவரி 4ம் திகதி மாலை 4 முதல் 5 ஆயுதமேந்திய மர்ம நபர்களால் கடத்தப்பட்டது.
இதையடுத்து கப்பலில் இருந்து பிரித்தானியாவின் போர்ட்டலுக்கு அவசர செய்தி அனுப்பியதாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
#IndianNavy’s Swift Response to the Hijacking Attempt of MV Lila Norfolk in the North Arabian Sea.
— SpokespersonNavy (@indiannavy) January 5, 2024
All 21 crew (incl #15Indians) onboard safely evacuated from the citadel.
Sanitisation by MARCOs has confirmed absence of the hijackers.
The attempt of hijacking by the pirates… https://t.co/OvudB0A8VV pic.twitter.com/616q7avNjg
மேலும் கடத்தப்பட்ட கப்பல் ரோந்து விமானம் (P8I) மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், கப்பலை மீட்க ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த INS Chennai மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று கடத்தப்பட்ட லீலா நோர்ஃபோக் போர் கப்பலை இடைமறித்து இந்திய கடற்படை மீட்டது. அத்துடன் கப்பலில் இருந்து 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மீட்பு வீடியோ
இந்திய கடற்படையினரின் தொடர் எச்சரிக்கைகளை தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் லீலா நோர்ஃபோக்(MV Lila Norfolk) கப்பலை வடக்கு அரபிக்கடலில் இருந்து INS Chennai கடற்படை வீரர்கள் நடத்திய மீட்பு நடவடிக்கை தொடர்பான வீடியோவை கடற்படை செய்தி தொடர்பாளர் X தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |