அரபிக்கடலின் மீன்பிடி படகுகளில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
இந்திய கடற்படை, இலங்கை கடற்படையுடன் இணைந்து அரபிக்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து கிரிஸ்டல் மெத் என்ற சுமார் 500 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.
அரபிக்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் கொடியுடன் கூடிய இரண்டு மீன்பிடி படகுகளை இந்திய கடற்படையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக சுமார் 500 கிலோ கிரிஸ்டல் மெத் கைப்பற்றப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கடல்சார் கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த போதைப்பொருட்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Narcotics Seizure - Combined Operation b/n #IndianNavy & @srilanka_navy.
— SpokespersonNavy (@indiannavy) November 29, 2024
Based on information received from #SrilankaNavy regarding probable narcotics smuggling by Sri Lankan flagged fishing vessels, the @indiannavy swiftly responded through a coordinated operation to localise &… pic.twitter.com/dkpzNQonTF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |