மீன்பிடி படகுடன் மோதிய இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்.., 2 மீனவர்கள் மாயம்
கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் 13 பேர் கொண்ட மீன்பிடி படகு மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 மீனவர்கள் மாயம்
கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடிக் படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து, கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் தூரத்தில் நடந்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், "13 மீனவர்களுடன் வந்த மர்தோமா (Marthoma) என்ற மீன்பிடி படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் (Scorpene-class) கடற்படை நீர்மூழ்கி கப்பல் மோதியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் காணமால் போனவர்களை மீட்பதற்காக ஆறு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்திய கடற்படை அனுப்பு வைத்தது.
Representative image
தற்போதுவரை, 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.மீட்கும் பணிகளை மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordination Centre Mumbai) கண்காணித்து வருகிறது.
அதோடு தேடுதல் பணியில் கடலோர காவற்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |