கடலுக்கடியில் இந்திய கடற்படை நடத்திய வெடிகுண்டு சோதனை வெற்றி
கடலுக்கு அடியில் இந்திய கடற்படை நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு சோதனை வெற்றி அடைந்துள்ளது.
வெடிகுண்டு சோதனை வெற்றி
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் தங்களது ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ராணுவம் நடத்துகிறது. அதேபோல இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், ஆயுத சோதனையில் இந்திய கடற்படை தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை நடத்தி இந்திய கடற்படை வெற்றி கண்டுள்ளது.
கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்ற எம்.ஐ.ஜி.எம் ஆயுதத்தை குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது. எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றை குறிவைத்து தாக்கும்.
இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு எம்.ஐ.ஜி.எம்.ஆயுதத்தை இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்றும் தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |