இந்திய கடற்படையில் இணையும் Scorpene Class நீர்மூழ்கிக் கப்பல்.., பிரான்ஸுடன் இணைந்து தயாரிப்பு
இந்திய கடற்படையில் ஸ்கார்பீன் ரகத்தின் 6-வது கடைசி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீலகிரி வகை போர்க்கப்பல் ஆகியவை இணைக்கப்படவுள்ளது.
Scorpene Class நீர்மூழ்கிக் கப்பல்
வரும் 2025 -ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்கார்பீன் ரகத்தின் 6-வது கடைசி நீர்மூழ்கிக் கப்பல் (Scorpene-class submarine) மற்றும் முதல் நீலகிரி வகை போர்க்கப்பல் (Nilgiri-class frigate) இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
இந்த 2 போர்க்கப்பல்களும் இந்த மாதம் இந்திய கடற்படையில் இணைக்கவிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2005 -ம் ஆண்டில் பிரான்ஸின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்தது. அதாவது, புராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் ஸ்கார்பீன் ரகத்தைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸைத் தளமாகக் கொண்ட கடற்படைக் குழுவின் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் மும்பையைச் சேர்ந்த Mazagon Dock Shipbuilders நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியது.
ஸ்கார்பீன் என்பது பிரெஞ்சு பெயர் ஆகும். இதற்கு இந்திய கடற்படை கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்த வகை 5 நீர்மூழ்கி கப்பல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் எடை 2000 டன் ஆகும். இது கடலின் மேற்பரப்பு, நீருக்கு அடியில் போரிடுதல், நீண்ட தூரத் தாக்குதல்கள், சிறப்பு நடவடிக்கைகள், உளவுத்துறை சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஆறு ஆயுதம் ஏவுதல் குழாய்கள் மற்றும் டார்பிடோக்கள், ஏவுகணைகள் உட்பட 18 ஆயுதங்கள் உள்ளன.
கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் முதன்மையானது, ஐஎன்எஸ் கல்வாரி ( INS Kalvari) ஆகும். இது, 2017-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், நீலகிரி ரக ஏவுகணை போர்க்கப்பல்களும் மசகான் டாக் துறைமுகத்தில் கட்டுமானத்தில் உள்ளன. இதில், மொத்தம் 7 கப்பல்கள் கட்டப்படவுள்ளன. இதில் முதல் கப்பல் வரும் ஜனவரி மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |