மோசடி செய்து இரண்டு பாஸ்போர்ட்கள் பெற்ற இந்தியர்: கண்டுபிடித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம்
மோசடி செய்து இரண்டு பாஸ்போர்ட்கள் பெற்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அளித்த அறிக்கை
2015ஆம் ஆண்டு, சஞ்சீவ் ஷா (Sanjiv Devendrakumar Shah) என்பவர், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளார். ஆகத்து மாதம் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் பிரித்தானியா செல்ல சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் அவர்.
பிரித்தானிய புலம்பெயர்தல் அமைப்பும், பிரித்தானிய இணை உயர் ஸ்தானிகராலயமும், சஞ்சீவ் ஷாவின் கைரேகைகள் சஞ்சீவ் பிரஜாபதி (Sanjay Devendra Prajapati) என்பவருடைய கைரேகைகளை ஒத்துப்போவதைக் கண்டுபிடித்துள்ளன.
இந்த விடயம் குறித்து பிரித்தானிய இணை உயர் ஸ்தானிகராலயம் அஹமதாபாத் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்ப, அது தொடர்பில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.
தெரியவந்த உண்மை
விசாரணையில், சஞ்சீவ் ஷா ஏற்கனவே 2009ஆம் ஆண்டு, சஞ்சீவ் பிரஜாபதி என்ற பெயரில் பாஸ்போர்ட் ஒன்றைப் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அந்த பாஸ்போர்ட்டுடன் அவர் 2009இல் பிரித்தானியாவுக்கும் சென்றுவந்துள்ளார்.
ஆக, சஞ்சீவ் பிரஜாபதி, மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி, சஞ்சீவ் ஷா என்ற பெயரில் இரண்டாவது பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
எனவே, மோசடி செய்ததாக சஞ்சீவ் பிரஜாபதி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |