இலங்கையில் இந்திய அதிகாரி மீது தாக்குதல்! கையில் கட்டுடன் வெளியான புகைப்படம்
இலங்கையில் தலைநகர் கொழும்பிற்கு அருகே இரவில் நடந்த தாக்குதலில் இந்திய மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "கொழும்பிற்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியபிரஜையும் இந்திய விசா நிலைய பணிப்பாளருமான திரு.விவேக் வர்மா அவர்களை இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் இன்று காலை சந்தித்தனர். இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மக்களிடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் கோரப்படுகினறனர். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எங்களை தொடர்புகொள்ளலாம்" என்று கூறியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக பொது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முக்கிய தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவரது பதவி விலகக் கோரி போராட்டங்கள் தொடர்ந்ததால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றதையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனிடையே இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
Relations between the people of ?? and ?? have always been cordial and friendly. In the current situation, #Indian nationals in #SriLanka are requested to remain aware of latest developments and accordingly plan their movements and activities. You may contact us when required.(2/
— India in Sri Lanka (@IndiainSL) July 19, 2022
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் போன்றவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆதரித்தார்.
இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என அவர் பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.