மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் இந்திய வம்சாவளி பெண்!
பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சமையல் கலைஞர் பங்கேற்கிறார்.
மன்னரின் முடிசூட்டு விழா
இன்று நடைபெறும் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் உலக தலைவர்கள் பலர் கலந்துகொள்ள லண்டனில் முகாமிட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பிரித்தானியாவும் இந்த விழாவைக் காண தயாராகி வருகிறது. இதனால் நாடு முழுவதும் களை கட்டியுள்ளது.
Adrian Dennis, Pool/AFP via Getty Images
இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில், பிரித்தானிய பேரரசு பதக்கம் பெற்ற 850 தன்னார்வலர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்திய வம்சாவளி பெண்
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சு மல்ஹியும் ஒருவர். இவர் ஒரு சமையல் கலைஞர் ஆவார். அத்துடன் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக, இவர் மகாராணியிடம் இருந்து பிரித்தானிய பேரரசு பதக்கம் வென்றார்.
Twitter/@TasteOfShetland
பிரித்தானியா முழுவதும் உள்ள பிற சமூக சாம்பியன்கள் மற்றும் தொண்டு பிரதிநிதிகளுடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மஞ்சு இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PTI
மஞ்சு மல்ஹி ஓபன் ஏஜின் சமூக பெரிய உள்ளூர் குடும்ப சமையல் கிளப்பையும் வழி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Instagram/Manju Malhi)