அமெரிக்காவின் பணக்கார பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளி பெண்... அவரின் சொத்து மதிப்பு
பெரிய நிறுவனங்கள் முதல் அதிநவீன ஸ்டார்ட்-அப்கள் வரை அனைத்து துறைகளிலும் பெண் வணிக உரிமையாளர்களாக அதிகரித்து வருகிறார்கள்.
ஒரு பெண் வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு உதாரணம் நேஹா நர்கடே.
யார் இந்த நேஹா நர்கடே?
நேஹா மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்து வளர்ந்தவர். சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். மேற்படிப்புக்காக, ஜார்ஜியா டெக்கில் படிக்க அமெரிக்கா சென்றார்.
'LinkedIn' பொறியாளராகப் பணியாற்றிய இவர், 'Apache Kafka' என்ற ஓப்பன் சோர்ஸ் மெசேஜிங் அமைப்பை உருவாக்க உதவியிருக்கிறார்.
2014-ம் ஆண்டு 'LinkedIn' ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து `கன்ஃப்ளுயன்ட்' என்கிற கிளவுட் நிறுவனத்தை உருவாக்க, இவரின் தலைமையில் கன்ஃப்ளூயண்ட் ஏழு பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை விரைவிலேயே எட்டியது.
இவரின் சொத்து மதிப்பு
2020-ல் 600 மில்லியன் டாலராக வேகமாக வளர்ந்து 2021-ல் 925 மில்லியன் டாலராக உயர்ந்தது.
2022-ல் அவரது சொத்து மதிப்பு 490 மில்லியன் டாலராக குறைந்தது.
அவரது தற்போதைய நிகர மதிப்பு 520 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.4,268 கோடி.
மேலும் இவர் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |