இந்திய வம்சாவளியினரின் அமெரிக்கக் குடியுரிமையை பறிக்கும் முயற்சியில் அதிகாரிகள்: யார் அவர்?
Indian origin man among 40 targeted in Trump administration’s denaturalisation drive: ட்ரம்ப் நிர்வாகம் 40 பேருடைய குடியுரிமைகளை பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அவர்களில் ஒரு இந்தியர் பெயரும் உள்ளது.
அமெரிக்க நீதித்துறை, அமெரிக்காவின் நவயுக வரலாற்றிலேயே, பெரிய அளவிலான குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
அமெரிக்கக் குடியுரிமையை பறிக்கும் முயற்சி
அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்ட 40 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கக் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

அப்படி அமெரிக்காவால் இலக்கு குறிக்கப்பட்டவர்களில், கலிபோர்னியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரும் ஒருவர்.
யார் அவர்? அவரது பெயர் பல்விந்தர் சிங். 1992ஆம் ஆண்டு புலம்பெயர்தல் நிலைக்கு விண்ணப்பிக்கும்போது ஒரு பெயரிலும், பின்னர் 2003ஆம் ஆண்டு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறும்போது வேறொரு பெயரிலும் விண்ணப்பித்துள்ளார் சிங்.
2009 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமை பெறும்போது, தான் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறும்போது பயன்படுத்திய பெயரைப் பயன்படுத்தி குடியுரிமை பெற்றுள்ளார் சிங்.
கைரேகைகள் மூலம் இரண்டு விண்ணப்பங்களையும் செலுத்தியது சிங்தான் என தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ள நீதித்துறை அலுவலகம், அவரது ஒழுக்கப் பண்பை மோசமாகப் பிரதிபலிக்கும் ஏராளமான தவறான தகவல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்காக அவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.