அமெரிக்க ராணுவ ரகசியங்களை வைத்திருந்த இந்திய வம்சாவளி கைது - சீனா உடன் தொடர்பா?
அமெரிக்க ராணுவ ரகசியங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இந்திய வம்சாவளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி கைது
64 வயதான இந்திய வம்சாவளியான ஆஷ்லே ஜே டெல்லிஸ்(ashley tellis), புகழ்பெற்ற வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணரும் ஆவார்.
சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவரான இவர், அமெரிக்க அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான சிவில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் டெல்லிஸ் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ ரகசியம் தொடர்பான ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன குற்றச்சாட்டு?
20 ஆண்டுகளாக அமெரிக்க அரசில் பணியாற்றிய அவரது வீட்டில், 1000 பக்கங்களுக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை அவர் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவுதுறைக்குள் நுழைந்த அவர், அமெரிக்க விமானப்படை தொடர்பான ஆவணங்களை அச்சிடுதுவது போல் தோன்றியதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு உணவகத்தில் சீன அதிகாரிகளை அவர் ரகசியமாக சந்தித்ததாகவும், அவர்கள் இவருக்கு இரு முறை பரிசுப் பையை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2,50,000 டொலர் அபாரதமும் விதிக்கப்படும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும், மூலோபாய திட்டமிடல் மற்றும் தென்மேற்கு ஆசியாவிற்கான மூத்த இயக்குநராகவும் பணியாற்றினார்.
அரசாங்கப் பணிக்கு முன்னதாக, RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
மேலும், Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia மற்றும் Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |