பாடம் கற்றுக்கொண்டோம்... ஒவ்வாமையால் இறந்த மகன் குறித்து பிரித்தானிய தம்பதி உருக்கம்
உயிரை காப்பாற்றியிருக்கக் கூடிய மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க தவறியதும் ஒரு காரணம் என, ஒவ்வாமையால் மரணமடைந்த சிறுவன் தொடர்பில் உடற்கூறு ஆய்வுகளை முன்னெடுத்த அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
புரோடீன் பானம் பருகிய நிலையில்
மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியை சேர்ந்த 16 வயது ரோஹன் கோதானியா என்ற சிறுவன் புரோடீன் பானம் பருகிய நிலையில், கடந்த 2020 ஆகஸ்டு மாதம் நோய்வாய்ப்பாட்டார்.
@sky
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானான். மரணத்திற்கு பின்னர் ஒரு வாரம் கடந்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு ஆய்வில், சிறுவனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சிறுவன் மரணமடைந்ததும் அவரது திடீர் நோயின் மர்மம் தீர்க்கப்படுவதற்கு முன்பு அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன.
சில மாதங்களுக்குப் பிறகு அவரது கல்லீரலை தானமாகப் பெற்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ரோஹனின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. பல்பொருள் அங்காடியில் இருந்து வாங்கப்பட்ட புரோடீன் பானம் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கண்டறிந்தனர்.
போராட வைப்பது முறையல்ல
சிறுவன் ரோஹனுக்கு அப்படியான ஒரு ஒவ்வாமை இருப்பது அவனது பெற்றோருக்கும் அவனும் தெரிந்திருக்கவில்லை என்றே மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கையில், ஆபத்தான நிலையில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அனைத்து பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும், ஆனால் ரோஹன் விவகாரத்தில் அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
@pa
மட்டுமின்றி, தங்கள் புகார் மனுவை பரிசீலித்து விசாரணை முன்னெடுக்கவே மூன்று ஆண்டுகள் போராடும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட வைப்பது முறையல்ல.
ரோஹனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றே தங்களுக்கு கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணத்தை கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், தற்போது மகனை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஹனின் மரணத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான மரணங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என புஷ்பா மற்றும் ஹிதேந்திரா தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |