இங்கிலாந்தில் குத்திக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன்: பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்பும் தாய்
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கிய நிலையில், அவனது தாய், பிரித்தானிய பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தவறுதலாக கொல்லப்பட்ட சிறுவன்
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.
தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.
Image: Mark Radford/Daily Mirror
இந்த துயர சம்பவம் தொடர்பாக Prabjeet Veadhesa மற்றும் Sukhman Shergill என்னும் இந்திய வம்சாவளியினர் இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
விசாரணையில், அந்த இளைஞர்களிடம் ஒரு சிறுவன் கடன் வாங்கியிருந்ததாகவும், தவறுதலாக ரோனனை அந்த சிறுவன் என நினைத்து தாங்கள் தாக்கிவிட்டதாகவும் அந்த இளைஞர்கள் கூறியிருந்தார்கள்.
பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்பும் தாய்
இந்நிலையில், ரோனனின் தாயான பூஜா (46), தந்தை சந்தர், சகோதரி நிகிதா (22) மற்றும் உறவினர்கள் Wolverhamptonஇல் கத்திக்குத்து தாக்குதல்களுக்கெதிராக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
தங்கள் அன்பிற்குரிய ரோனனை தாங்கள் இழந்து வாடும் நிலையில், இன்னமும் கத்திக்குத்து தாகுதல்களுக்கெதிராக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள் ரோனன் குடும்பத்தார்.
Image: West Midlands Police
இந்நிலையில், தான் பிரதமர் ரிஷியை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் ரோனனின் தாயாகிய பூஜா.
இதுபோன்ற பயங்கர கத்திகள், வாள்கள் மக்களை கொலை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றின் விற்பனை ஏன் தடை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்புகிறார் பூஜா.
Image: PA
இப்படிப்பட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோரால் மற்ற குடும்பங்களுக்கும் இழப்பு ஏற்படாதவகையில் அவற்றை தடை செய்ய பிரதமரை தான் கோர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர்.
Image: Family Collect
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |