லண்டன் மேயர் தேர்தலில் ஒரு இந்திய வம்சாவளி வேட்பாளர்
லண்டன் மேயர் தேர்தலில், பாகிஸ்தான் வம்சாவளியினரான தற்போதைய மேயரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில், இந்திய வம்சாவளியினர் ஒருவரும் இருக்கிறார்.
பாகிஸ்தான் வம்சாவளியினரை எதிர்த்து இந்திய வம்சாவளியினர்
லண்டன் மேயர் தேர்தலில், தற்போதைய மேயரான சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் ஒருவர், இந்திய வம்சாவளியினரான தருண் குலாட்டி (Tarun Ghulati).
இந்தியாவின் டெல்லியில் பிறந்தவரான தருண், தனது பின்னணி மற்றும் நிதித்துறை அனுபவம் ஆகியவை தனக்கு மேயர் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தரும் என நம்புகிறார்.
MBA படித்தவரான தருண், HSBC வங்கியில் சர்வதேச மேலாளராக பணியாற்றியவர் ஆவார். ஆகவே, தனக்கு பணத்தைக் கையாளும் முறை தெரியும் என்றும், தன்னால் லண்டனுக்கு புதிய பணத்தைக் கொண்டுவரமுடியும் என்றும் கூறுகிறார் தருண்.
என்றாலும், பிரித்தானிய ஊடகங்கள், மேயர் தேர்தலில் மீண்டும் சாதிக் கான்தான் வெற்றி பெறுவார் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |