ரிஷிக்கு பதிலாக கட்சித் தலைமைக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்: மீண்டும் இவரா?
பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரிஷி சுனக் பதவி விலகினார்.
அவருக்கு பதிலாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைவர் ஒருவரைத் தெர்ந்தெடுக்கவேண்டியுள்ளது. இந்நிலையில், கட்சித் தலைமைக்கு இந்திய வம்சாவளியினர் ஒருவர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சித் தலைமைக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்
பிரித்தானியாவின் முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியில் பல தரப்பிலிருந்தும், பிரீத்தியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமைக்கு போட்டியிடுமாறு அவரை வற்புறுத்திவருவதாகவும், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரச்சார அலுவலர்கள் பலருடைய ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் பிரீத்திக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இவரா?
ஆனால், மீண்டும் இவரா என்னும் ரீதியிலும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதாவது, உள்துறைச் செயலராக இருக்கும்போது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை பிரீத்தி மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அத்துடன், சக அரசு ஊழியர்களை மரியாதைக் குறைவாக நடத்துதல், அவர்களைப் பார்த்து சத்தமிடுதல், வம்புக்கிழுத்தல் என பல குற்றச்சாட்டுகள் பிரீத்தி மீது உள்ளன.
2020ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் ஆலோசகரான Sir Alex Allan, பிரீத்தி சக ஊழியர்களிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதன் மூலம், அமைச்சருக்கான ஒழுக்க நெறிகளை மீறியதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
ஆனால் ஜான்சன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, Sir Alex Allan தன் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், 2021ஆம் ஆண்டு, அரசு ஊழியர்கள் யூனியன், பிரீத்திக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவிப்பதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். ஆனால், வழக்கில் அவர்கள் தோற்றுவிட்டார்கள்.
ஆக, இப்படிப்பட்ட பிரீத்தி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு போட்டியிடுகிறாரா? என்னும் ரீதியில் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |