மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அழைப்பு! யார் அவர்?
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா அழைப்பிதழ் பட்டியலில் சமூக சாம்பியன்களில் இந்திய வம்சாவளி சமையல்காரர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அழைப்பு
மே 6-ஆம் திகதி லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவிருக்கும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டுவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள, பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் (BEM) வென்ற 850 தன்னார்வலர்கள் உட்பட மற்ற சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு பிரதிநிதிகள் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான அழைப்பிதழ் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹி இடம்பெற்றுள்ளார்.
Getty/Facebook
கோவிட்-19 தொற்று காலத்தின்போது லண்டனில் உள்ள சமூகத்திற்கான சேவைகளுக்காக மஞ்சு மல்ஹிக்கு பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் வழங்கப்பட்டது. அதற்காக கௌரவிக்கும் முறையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மஞ்சு மல்ஹி
மல்ஹி ஒரு தொழில்முறை சமையல்காரர் ஆவார். அவர் 2016-ஆம் ஆண்டு முதல், Open Age தொண்டு நிறுவனத்தில் ரெசிடென்ட் செஃப் ஆக செயல்பட்டார். இது லண்டனில் உள்ள வயதானவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது, 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் புதிய ஆர்வங்களை உருவாக்கி கொடுத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
seasonedpioneers
சமயற்கலைஞர் மட்டுமல்லாது ஒரு உணவு எழுத்தாளருமான மஞ்சு மல்ஹி பிரித்தானியாவில் பிறந்தார். வடமேற்கு லண்டனில் வளர்ந்தார் மற்றும் ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவர் தனது குழந்தைப் பருவத்தின் பல ஆண்டுகளை இந்தியாவில் கழித்தார், அங்கு அவர் தனது பாரம்பரியமான நாட்டின் பரந்த மற்றும் மாறுபட்ட உணவு வகைகளை ஆராய்ந்து அனுபவித்தார்.
மஞ்சு மல்ஹிக்கு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியால் BEM வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.