புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்குப் பின் அமெரிக்கா திரும்பிய இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்
இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்று புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்குப் பின் அமெரிக்கா திரும்பிய நிலையில், பயங்கர விபத்தொன்றில் சிக்கியது.
இந்திய வம்சாவளி குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவின் வட கரோலினாவில் வாழ்ந்துவந்த ஆஷா (Venkata Asha Khanna Appana, 48) கிருஷ்ணா (Krishna Kishore Koti Kalapudi, 49) தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ஷிவானி (21), சுச்சய் (16) ஆகியோருடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா சென்றுள்ளனர்.
கடந்த வார இறுதியில் அவர்கள் அமெரிக்கா திரும்பிய நிலையில், அமெரிக்காவில் தாங்கள் வாழும் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, சாலையில் தவறான பாதையில் வந்த கார் ஒன்று அவர்களுடைய கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
GoFundMe
இந்த விபத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆஷா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, கிருஷ்ணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், அதே காரில் பின் இருக்கையில் தம்பதியரின் பிள்ளைகளும் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.
அவர்கள் விபத்தில் உயிர் தப்பி விட்ட நிலையில், பெற்றோரின் மரணத்தைக் கண்ட அதிர்ச்சியிலிருக்கும் அவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் உதவிசெய்துவருகிறார்கள்.
ஆஷா கிருஷ்ணா தம்பதியர், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில், தவறான பாதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மேரிலேண்ட் என்னுமிடத்தைச் சேர்ந்த மைக்கேல் (Michael Coupet, 34) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |