வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி பிரித்தானியர்... ஸ்தம்பித்துப்போன குடும்பம்
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான இந்திய வம்சாவளி பிரித்தானியர் மாயமான நான்கு மாதங்களுக்கு பின்னர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை மர்மம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
தக்கரின் சடலம் மீட்கப்பட்டது
இந்திய வம்சாவளி பிரித்தானியரான 58 வயது ஹர்ஜிந்தர் 'ஹரி' தக்கர் தமது குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த ஆண்டு இறுதியில் டெல்ஃபோர்ட் பகுதியில் பயணிக்கும் போது, காரில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளார்.
Image: BPM MEDIA
பர்மிங்காமில் பிறந்த தக்கர் டாவ்லி பகுதியில் வாழ்ந்து வந்தார். குறித்த சம்பவத்திற்கு பின்னர் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன், ஜனவரி மாதம் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து தக்கரின் சடலம் மீட்கப்பட்டது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியது.
தக்கர் மாயமானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியதுடன், ஆயிரக்கணக்கானோர் அவருக்காக தேடும் பணியிலும் களமிறங்கினர். சமூக ஊடகங்களிலும் அவர் தொடர்பில் தகவல் வெளியிட்டு உதவி கோரியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது தக்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என உடற்கூறு ஆய்வாளர் உறுதி செய்துள்ளார். தக்கரின் சடலமானது Three Furnaces மதுபான விடுதிக்கு அருகாமையில், மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
ஜனவரி 23ம் திகதி, பகல் சுமார் 11.44 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் சடலம் ஒன்றை காண நேர்ந்ததாக அப்பகுதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், அது தக்கர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மர்ங்கள் அடர்ந்த பகுதிக்குள் மாயம்
அதன் பின்னர் அவரது பற்கள் தொடர்பான தரவுகளை ஒப்பிட்டும் அந்த சடலம் தக்கருடையது என உறுதி செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் திகதி உறவினர்களை சந்திக்கும் பொருட்டு குடும்பத்துடன் கார் ஒன்றில் தக்கர் பயணப்பட்டுள்ளார்.
Credit: West Mercia Police
இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாமல் போக, கார் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்து வெளியேறிய தக்கர், திடீரென்று மர்ங்கள் அடர்ந்த பகுதிக்குள் ஓடி மாயமாகியுள்ளார்.
வாகனத்தில் இருந்த குடும்பத்தினர் அப்பகுதி முழுவதும் தேடியும் தக்கரை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவத்தின் போது தக்கர் பீதியடைந்த நிலையில் காணப்பட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும், தக்கர் தமது உளவியல் பாதிப்பு தொடர்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார் எனவும், தூக்கமில்லாமல் தவித்தார் எனவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என குடும்பத்தினர் எவரும் எதிர்பார்க்கவில்லை என்றே கூறுகின்றனர்.