தங்க விசா பெற்ற கேரள மாணவர் வெளிநாடொன்றில் திடீர் மரணம்
ஐக்கிய அரபு அமீரகத்தில், தங்க விசா பெற்ற கேரள மாணவர் ஒருவர் தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது திடீர் மரணமடைந்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கேரள மாணவர் திடீர் மரணம்
கேரளாவைச் சேர்ந்த G கிருஷ்ணகுமார், விது கிருஷ்ணகுமாரின் மகன் வைஷ்ணவ் (18), ஐக்கிய அரபு அமீரகத்தில் BBA முதலாமாண்டு பயின்றுவந்தார்.
செவ்வாயன்று, தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார் வைஷ்ணவ்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கல்வியில் சிறந்து விளங்கியதற்காக தங்க விசா (UAE Golden Visa for students) பெற்ற வைஷ்ணவ், ஒழுக்கத்துடன், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டவர் ஆவார்.
ஆகவே, அப்படிப்பட்ட தங்கள் பிள்ளை திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வைஷ்ணவின் உடலை கேரளாவுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |