இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி தாய் சேய் நல மருத்துவர் பணியிடை நீக்கம்: பின்னணி
இங்கிலாந்தில் தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிவரும் இந்திய வம்சாவளியினரான பெண்ணொருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னணி
இங்கிலாந்திலுள்ள Eaglestone என்னுமிடத்தில் தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிவருபவர் Dr. பிரமிளா தம்பி (62).
தன்னிடம் பிரசவத்துக்கு வந்த பெண்ணொருவர் சிசேரியன் முறையில் பிரசவத்துக்கு கோரிக்கை வைக்க, அதை நிராகரித்து, சர்ச்சைக்குரிய ஒரு முறையில் பிரசவம் பார்த்துள்ளார் Dr. பிரமிளா.
அதாவது, ஒரு காலத்தில் forceps delivery என்னும் ஒரு பிரசவ முறை இருந்தது. பிரசவிக்க கஷ்டப்படும் பெண்களின் கருப்பையிலிருக்கும் குழந்தையை, கருப்பை வாய் வழியாக forceps என்னும் இடுக்கி போன்ற கருவியை பயன்படுத்தி, குழந்தையின் தலையைப் பிடித்து மெதுவாக வெளியே எடுப்பதுண்டு.
இந்த பிரசவ முறையில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், அந்த இடுக்கியை சற்று அதிகம் அழுத்தினால் கூட, பஞ்சு போலிருக்கும் குழந்தையின் தலை பாதிக்கப்படும். அப்படி இந்த பிரசவ முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் உண்டு.
ஆக, தன்னிடம் சிசேரியன் முறை பிரசவத்துக்கு கோரிக்கை வைத்த பெண்ணை, தன்னுடைய அனுபவத்தை காரணமாக காட்டி, forceps முறையில் பிரசவம் பார்த்துள்ளார் Dr. பிரமிளா.
ஆனால், forceps முறை பிரசவத்தால் அந்தக் குழந்தையின் தலை மற்றும் முகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அதன் தாய் புகாரளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து Dr. பிரமிளா மூன்று வாரங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |