பிரித்தானியாவில் 7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற செவிலியரைப் பிடிக்க உதவிய இந்திய வம்சாவளி மருத்துவர்
பிரித்தானியாவில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், 7 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த செவிலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவரும் உதவியுள்ளார்.
7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற செவிலியர்
பிரித்தானிய குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றிவந்தவர் லூசி (Lucy Letby, 33). 7 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ததாகவும், 6 குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸில் காற்றை செலுத்துவது, அதிக அளவு இன்சுலினை செலுத்துவது முதல், பலவகையில் குழந்தைகளுக்கு அதிர்ச்சியை உருவாக்கி அவர்களை சாகவிட்டுள்ளார் லூசி.
செவிலியரைப் பிடிக்க உதவிய இந்திய வம்சாவளி மருத்துவர்
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தொடர்ந்து மூன்று குழந்தைகள் உயிரிழக்கவே, மருத்துவர்கள் அதை மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
தொடர்ந்து குழந்தைகள் செயலிழந்து மரணமடையவே, சில மருத்துவர்கள், அவற்றின் பின்னணியில் செவிலியர் லூசி இருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்கள்.
அந்த மருத்துவர்களில், இந்திய வம்சாவளியினரான Dr ரவி ஜெயராமும் ஒருவர்.
மருத்துவர்கள் எச்சரித்த நிலையிலும், மருத்துவமனை நிர்வாகம், 2017 ஏப்ரலில்தான் பொலிசாரை சந்திக்க மருத்துவர்களுக்கு அனுமதியளித்துள்ளது.
பத்தே நிமிடங்கள் மருத்துவர்கள் கூறியதைக் கேட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், நிச்சயம் இந்த விடயத்தை பொலிசார் கையாளவேண்டும் என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்துதான், விசாரணைக்குப் பின் லூசி கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை அவரது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |