ஆசை வார்த்தை கூறி 5 பெண்களை... வெளிநாட்டில் வசமாக சிக்கிய இந்திய வம்சாவளி நபர்: பகீர் பின்னணி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 5 கொரிய பெண்களை சீரழித்த விவகாரத்தில் அரசியல் செல்வாக்கு மிகுந்த இந்திய வம்சவளி நபர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மோசமான நடத்தை கொண்ட நபர்
தொடர்புடைய பெண்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி அவர்களை சீரழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிட்னி நகரின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான நடத்தை கொண்ட நபர்களில் ஒருவராக அவரை உள்ளூர் ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ளது.
Credit: JAMES BRICKWOOD
பாலேஷ் தன்கர் என்ற அந்த நபர், இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் குழு என்ற அவுஸ்திரேலிய அமைப்பின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்கர் சீரழித்துள்ள பெண்களின் காணொளி பதிவுகளையும் அவர் வசமிருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தன்கர் மீது 39 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் ஒவ்வோன்றிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தண்டனை தீர்ப்பு வெளியாகும் வரையில் ஜாமீனில் இருக்குமாறு தன்கர் கேட்டுக் கொண்டார், ஆனால் நீதிபதி மைக்கேல் கிங் அதற்கு மறுத்துள்ள நிலையில், அவரை அதிகாரிகள் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.
டசின் கணக்கான காணொளிகள்
43 வயதான தன்கர் எதிர்வரும் மே மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.
image from Dhankhar’s now removed website.
மேலும், தனது சட்டப் போராட்டத்திற்கு சொத்துக்களை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டர் என கூறுகின்றனர். 2018ல் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தன்கரின் வசமிருந்து பல்வேறு பெண்களுடன் டசின் கணக்கான காணொளிகளை கைப்பற்றியிருந்தனர்.
பல காணொளிகளில் பெண்கள் சுய நினைவின்றி காணப்படுவதாகவே கூறப்படுகிறது. மேலும் ஒரு காணொளியானது 95 நிகிடங்கள் வரையில் காட்சிகள் பதிவாகியுள்ளது.