கனடாவில் இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொலை
இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எட்மண்டனில் (Edmonton) உள்ள குருநானக் சீக்கிய கோவில் தலைவர் மற்றும் பொறியாளர் பூட்டா சிங் கில்.
இந்திய வம்சாவளியான இவர், அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர் நடத்திய துப்பிக்கிச்சூட்டில் பூட்டா சிங் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து விழுந்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது பூட்டா சிங்கும், மற்றொரு நபர் இறந்து விட்டனர்.
காயமடைந்த மூன்றாவது ஆள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பூட்டா சிங் கொல்லப்படுவதற்கு முன்பு மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |