பார்ப்பதற்கு மாமாவை போல் இருந்ததால் ஓடும் பேருந்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குத்திக்கொலை
அமெரிக்காவில் ஓடும் பேருந்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி தொழிலதிபர்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 வயதான அக்ஷய் குப்தா(Akshay Gupta) என்பவர் ASG Research என்ற சுகாதார-தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
டெக்சாஸின் ஆஸ்டின் பகுதியில் உள்ள பொதுப் பேருந்தில், மே 14 ஆம் திகதி மாலை பயணம் செய்துள்ளார்.
அப்போது சக இந்தியரான தீபக் கண்டேல்(Deepak Kandel) என்பவர், அவரது கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். ஆனால் அக்ஷய் குப்தா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாமாவை போல் இருந்ததால் கொலை
இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பேருந்து நின்றதும் தீபக் கண்டேல் மற்ற பயணிகளுடன் அமைதியாக இறங்கி சென்றார்.
பேருந்து நிறுத்தப்பட்ட ஒரு மைல் தூரத்தில், தீபக் கண்டேலை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் பார்ப்பதற்கு தனது மாமாவை போல் இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தீபக் கண்டேல் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டில், டிராவிஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், பலமுறை அவர் தவறான நடத்தை காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |