கனடாவில் சிறுமிகளை கடத்தி ஆபாசப்படம் எடுத்த இந்திய வம்சாவளி தந்தை-மகன் கைது
கனடாவில் மைனர் சிறுமிகளை கடத்தி போதை மருந்து கொடுத்து சித்ரவதை செய்து அநாகரீகமான காட்சிகளை பதிவு செய்து ஆபாசமாக படம் எடுத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
பல மாதங்களாக இருவராலும் பல சிறுமிகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குர்பர்தாப் சிங் வாலியா (56) மற்றும் அவரது மகன் சும்ரித் வாலியா (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று கல்கேரி காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
globalnews.ca
காணாமல் போன 13 வயது சிறுமி
கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன 13 வயது சிறுமியை தேடியதில் இருவரும் பிடிபட்டனர். பின்னர் தான் சும்ரித்துடன் நெருக்கமாக இருந்ததை அந்த பெண் வெளிப்படுத்தினார்.
இருவரும் தனக்கு மது, போதைப்பொருள் மற்றும் பிற போதை பொருட்களை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார்.
இரண்டு கடைகளை நடத்திவந்த தந்தை-மகன்
கல்கரியில் உள்ள Haddon Convenience Store-ல் பணிபுரிந்த தந்தையும் மகனும் பின்னர் அதன் உரிமையாளர்களாக ஆனார்கள்.
சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்கள் நடந்த கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு அடுத்தபடியாக இருக்கும் Premier Liquor Wine and Spirits எனும் கடையும் அவர்களுக்கு சொந்தமானது.
PHOTO BY DARREN MAKOWICHUK /Postmedia
இருவரும் கைது
விசாரணையில், இந்த இரண்டு கடைகளிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்களுக்கு தந்தையும் மகனும் கஞ்சா, சிகரெட், மது போன்றவற்றை வழங்குவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த சம்பவங்கள் டிசம்பர் 2022 மற்றும் மே 2023-க்கு இடையில் நடந்ததாக நம்பப்படுகிறது. விசாரணையில் இருவரும் ஜூன் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
பரிமுதல்கள்
அவர்களது ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் $97,500 மதிப்புள்ள 975 கிராம் கொக்கைன் மற்றும் ஏழு கைத்துப்பாக்கிகள் கிடைத்தன.
இதையடுத்து, அவர்களது நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுவர் ஆபாசப் படங்கள் அடங்கிய கணினி, போதைப்பொருள், போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
ஏராளமான குற்றச்சாட்டுகள்
மைனர் ஒருவருடன் உடலுறவு வைத்தல், பாலியல் சுரண்டல், பாலியல் வன்கொடுமை, சிறுவர் ஆபாச படங்களை உருவாக்குதல், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்தல் மற்றும் குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமரித் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை, மிரட்டி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட புகையிலையை இளைஞர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தந்தை குர்பர்தாப் சிங் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியுடன் உடலுறவு கொண்டதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.