பெற்ற தாயை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர்: பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் இந்திய வம்சாவாளியினர் ஒருவர் தன் தாயை அடித்துக்கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெற்ற தாயை அடித்துக்கொன்ற மகன்
இங்கிலாந்தின் பர்மிங்காமில் வாழும் சுர்ஜித் சிங் (39), தன் தாயான மொஹிந்தர் கௌரை (76) தன்னுடன் வைத்து கவனித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் தன் தாயை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் சிங்.
டிவி ரிமோட் தொடர்பில் இருவருக்கும் சண்டை வர, சிங் போதையில் இருந்ததற்காக அவரது தாய் அவரை திட்டியதால், கோபத்தில் அவரை தாக்கியுள்ளார் சிங்.
தாயை அடித்துப்போட்டுவிட்டு, தன் உறவினர் ஒருவரிடம் நடந்ததை சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சிங்.
அந்த உறவினர் பொலிசாருக்கு தகவலளிக்க, இரத்த வெள்ளத்தில் கிடந்த மொஹிந்தர் கௌரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் பொலிசார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் மொஹிந்தர் கௌர்.
பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சிங் கைது செய்யப்பட்டார். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் போதைப்பொருள் ஒன்றுடன் மதுபானமும் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
தற்போது இந்த வழக்கில் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு அவர் ஜாமீனில் வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |