பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி குடும்பம்
பிரித்தானியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று முதலிடம் பிடித்துள்ளது.
டாப் 20 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதலிடம்
The Sunday Times Rich List 2025 என்னும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அந்த குடும்பம், ஹிந்துஜா குடும்பம்.
இந்திய வம்சாவளியினரான கோபி ஹிந்துஜா தலைமையேற்று நடத்தும் ஹிந்துஜா குழுமத்தின் சொத்து மதிப்பு, 35.3 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
இலங்கை மதிப்பில் அது 1,40,07,12,11,90,000.00 ரூபாய் ஆகும்.
ஹிந்துஜா குழுமம், வாகனங்கள், எண்ணெய் மற்றும் ரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |