இந்திய வம்சாவளி பெண் ஊடகவியலாளருக்கு லண்டனில் வழங்கப்பட்டுள்ள கௌரவம்
இந்திய வம்சாவளி பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு லண்டனில் அரிய கௌரவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் கௌரவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்
Freedom of the City of London என்னும் அந்த அரிய கௌரவத்தைப் பெற்றுள்ள அந்தப் பெண் ஊடகவியலாளரின் பெயர் ஷ்ருதி த்ரிபாதி சோப்ரா (Shruti Tripathi Chopra).
நிதி இதழியலுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காகவும், உலகளாவிய நிதித்துறையில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை ஆதரித்ததற்காகவும் ஷ்ருதிக்கு இந்த அரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

Dow Jones என்னும் நிறுவன வெளியீடுகளான Financial News மற்றும் Private Equity News ஆகிய ஊடகங்களில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார் ஷ்ருதி.
ஷ்ருதி, மிகக் குறைந்த வயதில் இந்த ஊடகங்களின் ஆசிரியராக பொறுப்பேற்றவர் என்னும் பெருமைக்குரியவர் ஆவார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், Freedom of the City of London என்னும் அந்த அரிய கௌரவத்தைப் பெற்றவர்களில் மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், ஜவஹர்லால் நேரு, ரத்தன் டாடா ஆகியோரும் அடங்குவர்.
அந்த வரிசையில், இளம் வயதிலேயே அந்த அரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார் ஷ்ருதி என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |