இந்திய வம்சாவளி இளைஞர் சாலை விபத்தில் பலி
Indian origin man dies in Australia crash: இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் பலியானார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் ஷர்மா, தன் மனைவி மகள்களுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்தார்.
சாலை விபத்தில் பலி
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இரவு 9.40 மணியளவில், தலைநகர் கான்பெர்ரா அருகே பயணித்துக்கொண்டிருந்த ஷர்மாவின் கார் மீது ட்ரக் ஒன்று மோதியுள்ளது.

ஷர்மா விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல், ஷர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ஷர்மாவுக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளார்கள்.
சோகம் என்னவென்றால், ஷர்மாவின் இரண்டாவது மகள் பிறந்து மூன்று வாரங்கள்தான் ஆகின்றன.
ஷர்மாவின் பெற்றோர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவருடைய மரணச் செய்தி அறிந்து அந்தக் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.