காதலியை கொடூரமாக தாக்கிக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர்: நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பு
இந்திய வம்சாவளியினர் ஒருவர் தனது காதலியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த வழக்கில், அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
காதலியை கொடூரமாக தாக்கிக் கொலை செய்த நபர்
இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினரான ராஜ் (Raj Sidpara, 50), தனது காதலியான தர்ன்ஜீத்தை (Tarnjeet Riaz, 44) கொடூரமாக தாக்கிக் கொலை செய்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 6ஆம் திகதி, பொலிசார் ராஜ் வீட்டுக்கு அழைக்கப்பட்ட நிலையில், அங்கு தர்ன்ஜீத் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தர்ன்ஜீத், அடிவாங்கி, கண்கள் இரண்டும் கருத்து, மூளையில் இரத்தம் கசிந்து, விலா எலும்பில் 20 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியான வில்லியம் (William Harbage), குற்றவாளியிடம் நீங்கள் என்ன செய்தீர்கள், ஏன் இப்படி செய்தீர்கள் என்பதற்கான காரணத்தைக் கூற மறுத்துள்ளீர்கள்.
என்றாலும், தர்ன்ஜீத்தை கொடூரமாக, இரக்கமில்லாமல் தாக்கியுள்ளீர்கள். அவரை குத்தி, மிதித்து தொடர்ந்து அடித்துள்ளீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்றார்.
அதைத் தொடர்ந்து, தர்ன்ஜீத்தைக் கொலை செய்த வழக்கில், வெள்ளிக்கிழமை, ராஜ்க்கு Leicester க்ரௌன் நீதிமன்றம் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |