பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த பரிதாபம்! மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

killed uk indian anand kidnap
By Ragavan Apr 15, 2021 04:34 AM GMT
Report

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் காருடன் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு நகரமான Leicester காவல்துறையினர், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிரைட்டன் சாலையில் ஒரு சிகப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக சென்றதை கண்டனர்.

பின்னர் அந்த காரை விரட்டிப் பிடிக்க முயற்சித்தபோது, அதிலிருந்து ஒரு 25 வயது மிக்க இளைஞர் இறங்கி தப்பியோட முயற்சித்தார். ஆனால் அவர் சிறிது தூரத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த காரில் ஒரு இந்திய வம்சாவளி நபர் கடுமையான காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அவர் விரைவாக Queen’s Medical Centre மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் நீண்டநேரம் போராடியும் 8 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த பரிதாபம்! மக்கள் உதவியை நாடும் பொலிஸார் | Indian Origin Man Killed Uk Kidnap Theft Attempt

பிரேத பரிசோதனையில் அவரது தலை மற்றும் மார்பில் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்பட்டதால் அவர் இறந்தார் என்பது தெரியவந்தது.

விசாரணையில், பலியான இந்திய வம்சாவளி நபர் ஆண்டி என்றும் அழைக்கப்படும் ஆனந்த் பர்மர் (47) என அடையாளம் காணப்பட்டார். அவர் வாகனத்தை கடத்தி திருட முயற்சித்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் சிறப்பு செயல்பாட்டு பிரிவு (EMSOU) முக்கிய குற்றக் குழு தலைமையிலான விசாரணை தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக திங்களன்று சந்தேகத்தின் பேரில் Leicester-ல் 34 வயதான மற்றோரு நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கொலை சந்தேகத்தின் பேரில் Thurmaston-ல் 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். பின்னர், ஒரு குற்றவாளிக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் Leicester-ல் 44 மற்றும் 34 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த பரிதாபம்! மக்கள் உதவியை நாடும் பொலிஸார் | Indian Origin Man Killed Uk Kidnap Theft Attempt

இந்நிலையில் "தற்போது ஐந்து பேர் காவலில் இருக்கும் நிலையில், ​​எங்கள் விசாரணை தொடர்கிறது, மேலும் அவரது மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்டவரின் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் Tony Yarwood கூறினார்.

அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பான தகவல் உள்ள எவரும் முன்வருமாறு பொலிஸார் கோரிக்கை வைத்துள்ளனர்.

எவிங்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை சிவப்பு Vauxhall Astra காரை கண்ட எவரும் தங்களுக்கு தெரிந்த தகவலை தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US