வாழ்க்கை நிறைவாக இல்லை., கனடா குடியுரிமையை விடத் தயாரான இந்திய வம்சாவளி இளைஞர்
கனேடிய குடியுரிமைப் பெற்றுள்ள இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் மீண்டும் இந்தியாவிற்கே சென்று குடியேற விரும்புகிறார்.
தனது “வாழ்க்கையில் நிறைவு இல்லை” எனக் கூறி கனடாவில் குடியுரிமை பெற்ற 25 வயது இந்திய வம்சாவளிய ஒருவர், இந்தியாவுக்கு முழுமையாக திரும்பத் தயார் என சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Gurgaon-இல் பிறந்து வளர்ந்த இந்த நபர், தற்போது கனடா குடியுரிமை மற்றும் OCI (Overseas Citizenship of India) வைத்திருக்கிறார்.
“Tech job இருக்கிறது, வீடு இருக்கிறது, ஆனால் மனநிறைவு இல்லை” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2021-ல் இந்தியா வருகை வாழ்க்கையை மாற்றியது
கடைசியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தபோது ஏற்பட்ட Nostalgic உணர்வு (கடந்தகால இனிமையான நினைவுகள்), அவரை 10 முறை இந்தியா வர வைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
“சிறு வயதில் அனுபவித்த உணர்வுகள் அனைத்தும் மீண்டும் வந்தது,” என பதிவிட்டுள்ளார்.
பெற்றோர்களின் எதிர்ப்பைக் கடந்து தனியாக முடிவு
தனது பெற்றோர்கள் இந்தியாவில் வீடு வாங்க தயாரில்லை என்பதையும், தான் தனியாக குறைந்த விலையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரு சிறிய தொழில் தொடங்கி, பின் பரம்பரைச் சொத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ விரும்புகிறார்.
Posts from the askindia
community on Reddit
மேற்கத்திய வாழ்க்கை எனக்கானது அல்ல
மேற்கத்திய நாடுகளில் வாழும் வாழ்க்கையை விமர்சித்து, “இந்தியாவிலும் குறைகள் இருக்கின்றன, ஆனால் மேற்கத்திய நாடுகளும் சந்தோஷமான வாழ்க்கையை உறுதி செய்யாது,” என குறிப்பிட்டுள்ளார்.
திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். “குடும்பத்தில் திருமணத் தொடர்பான பல பிரச்சனைகளை பார்த்து விட்டேன். எனவே, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை,” என பதிவிட்டுள்ளார்.
இத்தகவல் வைரலாக பரவி, பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பயனர், “உங்களுக்கு சந்தோஷம் தருமென நினைத்தால் செய்யுங்கள். மற்றவர்களது கருத்துகளில் குழப்பமடைய வேண்டாம்,” என கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian techie Canada to India, Canada OCI return story, Indian man leaves Canada, Western lifestyle vs India, Canada immigration reverse, Emotional return to India, NRI moving back to India, Indian leaving Canadian citizenship, Life after OCI return, Tech worker returns to India