கனடாவில் மனைவி, மாமியாரை கொடூரமாக கொன்ற இந்திய இளைஞர்! அதிர்வலையை கிளப்பிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
கனடாவில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த இந்திய இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்தது.
அதன்படி தல்விந்தர் சிங் (29) என்ற நபர் அந்த ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி தனது மனைவி பல்ஜித் தண்டி (32) மற்றும் மாமியார் அவ்தார் கவுர் (60) ஆகிய இருவரையும் கொடூரமாக தாக்கி பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து தல்விந்தரை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி கொடூரன் தல்விந்தருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு முதல் 25 ஆண்டுகளுக்கு பரோல் அளிக்கப்படாது எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.