நலமா என கேட்ட இந்தியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த விபரீதம்
அமெரிக்காவில் நலமா என கேட்ட இந்தியரை ஒருவர் சுட்டுகொன்றுள்ளார்.
இந்தியர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில், இந்தியரான 51 வயதான ராகேஷ் எஹாகபன்(Rakesh Ehagaban) மோட்டல் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மோட்டலுக்கு வெளியே துப்பாக்கிசூடு சத்தம் கேட்டபோது, வெளிய சென்ற ராகேஷ் எஹாகபன். அங்கிருந்த ஸ்டான்லி யூஜின் வெஸ்ட்(Stanley Eugene West) என்ற நபரிடம் "என்ன ஆனது? நீங்கள் நலமா" என கேட்டுள்ளார்.
ராகேஷை நெருங்கி வந்த வெஸ்ட், துப்பாக்கியை நீட்டி ராகேஷின் தலையில் சுட்டுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர், வெஸ்ட்டை பிடிக்க அவரது வாகனத்தை விரட்டி சென்றுள்ளனர்.
துப்பாக்கிசூடு
அப்போது வெஸ்ட் துப்பாக்கியால் சுட்டதில் துப்பறியும் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில், காயத்துடன் வெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் குழந்தையுடன் 2 வாரங்களாக அந்த மோட்டலில் தங்கியுள்ளார். அன்று தனது காரில் மோட்டலில் இருந்து அந்த பெண் வெளியேறும் போது வெஸ்ட் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
தற்போது வெஸ்ட் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |