டர்பனுக்கு மேட்சிங்கா 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்.. வேறமாரி பிரித்தானிய கோடீஸ்வரர்
டர்பன் கலருக்கு மேட்சிங்காக 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக்குவித்துள்ளார் இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரர்.
15 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால் இன்று 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சீக்கியர்களின் அடையாளங்களில் ஒன்று டர்பன் (தலைப்பாகை). பிரிட்டிஸ் பில்கேட்ஸ் என்று புகழப்படும் பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் தன்னிடம் இருக்கும் டர்பன் நிறங்களில் மொத்தம் 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்.
Reuben Singh
ஆடம்பர வாழ்க்கைக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் இந்த நபரின் பெயர் ரூபன் சிங் (Reuben Singh). ரோல்ஸ் ராய்ஸ் காருடன் சில படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது தலைப்பாகையின் நிறமும், காரின் நிறமும் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தனக்குத்தானே 5 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசு
கடந்த தீபாவளியன்று ரூபன் பல்வேறு வண்ணங்களில் ஐந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தனக்குத்தானே பரிசாக அளித்துள்ளார். தற்போது அவரிடம் 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன.
ரூபன் 3.22 கோடி மதிப்பிலான லம்போர்கினி ஹுராகன் மற்றும் புகாட்டி வேய்ரான் காரையும் வைத்துள்ளார். அவர் ஒரு ஃபெராரி F12 பெர்லினெட்டா, ஒரு போர்ஷே 918 ஸ்பைடர் மற்றும் பகானி ஹுய்ரா ஆகியவற்றையும் வைத்திருக்கிறார்.
Reuben Singh
யார் இந்த ரூபன் சிங்?
ரூபன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் அவரது குடும்பம் 1970-களில் இருந்து பிரித்தானியாவில் வசித்து வருகிறது. இப்போது ரியுபென் சிங் இங்கிலாந்தில் பங்கு வர்த்தக தொழில் செய்து வருகிறார். அதோடு கஸ்டமர் சர்வீஸ் அவுட் சோர்சிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ரூபன் சிங் பலரால் பிரிட்டிஷ் பில் கேட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் தன்னை ஒரு பிரிட்டிஷ் சீக்கியர் என்று வர்ணித்துக் கொள்கிறார்.
Reuben Singh
தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
Reuben Singh
Reuben Singh, 15 Rolls Royce Cars, Rolls-Royce, Billionaire,