கணவர் யார் என்பதை மறைத்து ஆடம்பர வாழ்க்கை: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் காவல் அதிகாரி பணி நீக்கம்

London United Kingdom Crime
By Thiru Dec 15, 2022 03:49 AM GMT
Report

பிரித்தானியாவில் கணவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற தகவலை மறைத்ததை தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி பெண் காவலர் பணி நீக்கம்

பிரித்தானியாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரஸ்விந்தர் அகலியு, தனது போதைப்பொருள் கடத்தல்கார கணவர் ஜூலியன் அகலியு பற்றிய தகவலை வெளியிடாமல் மறைத்ததற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

இந்த விசாரணையில் தனது கணவர் தொழில்முறை கால்பந்து வீரர்களுக்கு சமையல்காரராக வேலை செய்வதன் மூலம் பணம் ஈட்டி வருகிறார் என்று நினைத்ததாக ரஸ்விந்தர் அகலியு தெரிவித்ததாக ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கணவர் யார் என்பதை மறைத்து ஆடம்பர வாழ்க்கை: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் காவல் அதிகாரி பணி நீக்கம் | Indian Origin Policewoman In Uk Fired Husband DrugFacebook/Rasvinder Agalliu

அத்துடன் தனது கணவர் வாரத்திற்கு 1000 முதல் 4000 பவுண்டுகள் வரை  நேரடி பணம் சம்பாதித்ததால் வரி செலுத்தவில்லை என்றும் ரஸ்விந்தர் அகலியு ஒழுங்காற்று தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளார்.

ரஸ்விந்தர் அகலியுவின் வாதத்திற்கு மறுப்பு தெரிவித்த தீர்ப்பாயம், அவரது வாதத்தில் நம்பகத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டது. மேலும் ரவிந்தர் அகலியு-வின் கணவர் ஜூலியன் அகலியு தனது போதைப்பொருள் விவகாரங்களை வீட்டிற்குள் மறைக்கவில்லை.

கணவர் யார் என்பதை மறைத்து ஆடம்பர வாழ்க்கை: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் காவல் அதிகாரி பணி நீக்கம் | Indian Origin Policewoman In Uk Fired Husband DrugFacebook/Rasvinder Agalliu- Julian Agalliu

போதைப் பொருட்களும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகளும் அவளது வீட்டில் தெளிவாகத் தெரிந்தன. அவைகள் அங்கே இருப்பதை அவள் அறிந்திருந்ததால், அத்துடன் தம்பதியினரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மூலம் ஜூலியனின் வருமானம் குறித்த நல்ல யோசனையை  காவல்துறை அதிகாரியான ரவிந்தர் அகலியு அறிந்து வைத்து இருந்தார் என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என தீர்ப்பாயம் தெரிவித்தது.

ரவிந்தர் அகலியுவின் வாதத்ததின் போது, தங்கள் வீட்டில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்ற அவரது கூற்றை தீர்ப்பாயம் ஏற்க மறுத்தது, மேலும் அவரின் மோசமான நடத்தையை குற்றம் என்று தீர்ப்பு வழங்கியது.

2020 ஆம் ஆண்டில் இருமுறை தம்பதியினரின் வடக்கு லண்டன் வீட்டில் சோதனையின் போது, 100 கிலோ பொட்டலங்கள், கோகோயின் பார்சல்கள், போதைப்பொருள் பரிமாற்றங்களின் சான்றுகள் மற்றும் சாத்தியமான துப்பாக்கி ஒப்பந்தம் பற்றிய உரையாடல் ஆகியவற்றைக் குறிப்பிடும் செய்திகளை போலீசார் கண்டறிந்தனர்.

கணவர் யார் என்பதை மறைத்து ஆடம்பர வாழ்க்கை: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் காவல் அதிகாரி பணி நீக்கம் | Indian Origin Policewoman In Uk Fired Husband DrugFacebook/Rasvinder Agalliu

தம்பதியினரின் படுக்கைக்கு அடியில் உள்ள லூயிஸ் உய்ட்டன் பெட்டியில் போதைப்பொருள் மற்றும் அவரது வீட்டில் 27,000 பவுண்டுகள் பணமும், சொத்தில் கஞ்சா பயிரிடப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர் என்று ஈவினிங் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரி ரவிந்தர் அகலியு, பணிநீக்கம் செய்யப்பட்டார், ஆனால் அவரது வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர் எதிர்கொள்ளவில்லை.

ஆடம்பர வாழ்க்கை

காவல்துறை அதிகாரி ரவிந்தர் அகலியு மற்றும் போதைப்பொருள் கடத்தல்கார கணவர் ஜூலியன் அகலியு  தம்பதியினர் மாதத்திற்கு 5,000 பவுண்டுகள் செலவாகும் சொத்தில் வசித்து வருகின்றனர், 70,000-பவுண்டுகள் மதிப்புள்ள ஆடி கார், டிசைனர் உடைகள் மற்றும் வடக்கு லண்டனில் உள்ள பார்னெட்டின் உயர்மட்ட ஹாட்லி வூட் என்கிளேவில் வீடுகள் என ஆடம்பர வாழ்க்கை முறையை அனுபவித்து வந்துள்ளனர்.

கணவர் யார் என்பதை மறைத்து ஆடம்பர வாழ்க்கை: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் காவல் அதிகாரி பணி நீக்கம் | Indian Origin Policewoman In Uk Fired Husband DrugFacebook/Rasvinder Agalliu- Julian Agalliu

ஜூலியன் என்க்ரோசாட் கம்யூனிகேஷன் சிஸ்டம் மூலம் ஆடம்பர ஹப்லோட் பிராண்டுடன் பேக் செய்யப்பட்ட மருந்துகளை விற்றதாக அறிக்கைகள் கூறுகிறது. 

கடந்த வாரம் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் ஜூலியன் அகலியு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், மேலும் அவரது தண்டனை பிப்ரவரி 9, 2023 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US